×

களியலில் ஓடையில் மிதந்து வந்த வீட்டு வரி ரசீதுகள்

*சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

அருமனை : களியல் ஜங்ஷன் அருகே ஓடையில் வீட்டுவரி ரசீது கட்டுக்கட்டாக மிதந்து வந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலானது. அவையனைத்தும் பழையவை என கடையால் பேரூராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. குமரி மாவட்டம் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் வரி வசூலர்கள் தவிர மற்ற பணியாளர்கள் மூலமாகவும் வீட்டுவரி, தண்ணீர் வரி உள்ளிட்டவை வசூல் செய்யும் பணி நடந்து வருகிறது.

ஆனால் பொதுமக்கள் வரிகட்டும் பணத்துக்கு சில ஊழியர்கள் ரசீதுகளை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்தநிலையில் களியல் ஜங்ஷன் அருகே குழித்துறை-ஆலஞ்சோலை ரோட்டின் குறுக்கே பாயும் ஓடையில் கடையால் பேரூராட்சி மூலம் வழங்கப்படும் வீட்டுவரி ரசீது, அலுவலக படிவங்கள் ஆகியவை கட்டுக்கட்டாக மிதந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை பொதுமக்கள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இதையடுத்து கடையால் பேரூராட்சி தூய்மை பாணியாளர்கள் அங்கு விரைந்து சென்று ரசீதுகள், அலுவலக படிவங்களை கைப்பற்றினர். இது குறித்து கடையால் பேரூராட்சி அலுவலகத்தில் கேட்டபோது, ஆற்றில் மிதந்து வந்த ரசீதுகள் மற்றும் அலுவலக படிவங்கள் அனைத்தும் 2021-2022ம் ஆண்டில் உள்ளவை ஆகும். அவை வரி வசூலரிடம் இருந்து தவறுதலாக ஓடையில் விழுந்திருக்கலாம்.

அதாவது ரசீது கட்டுகளை மற்றொரு கட்டிடத்துக்கு மாற்றும்போது தவறுதலாக விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் ஏற்கனவே வரி செலுத்தியதற்கு தரப்பட்ட ரசீதுகள் ஆவணமாகவும் பொதுமக்களுக்கு பயன்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் அதிகாரிகள் அலட்சியமாக ரசீதுகளை ஆற்றில் தவறவிட்டுள்ள சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

The post களியலில் ஓடையில் மிதந்து வந்த வீட்டு வரி ரசீதுகள் appeared first on Dinakaran.

Tags : Kalial Junction ,Kumari ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...