×

புதிய தேர்தல் ஆணையர் யார்?.. பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று கூடுகிறது

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று கூடுகிறது. புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று கூடுகிறது. பிரதமர் மோடி பரிந்துரைக்கும் ஒன்றிய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆகியோர் தேர்வுக்குழுவில் உள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி முதல் முறையாக தேர்வுக்குழு இன்று கூடுகிறது

தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டேவின் பதவிக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. சட்ட அமைச்சர் தலைமையிலான தேடுதல் குழு, ஏற்கனவே 5 பேரின் பெயரை இதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது. தேடுதல் குழு பரிந்துரைக்காத நபர்களையும், பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு, தேர்தல் ஆணையராக நியமிக்க புதிய சட்டம் வழிவகை செய்கிறது.

The post புதிய தேர்தல் ஆணையர் யார்?.. பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று கூடுகிறது appeared first on Dinakaran.

Tags : Modi ,Delhi ,Selection Committee ,Union ,Minister ,Lok Sabha Congress ,President ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!