- திண்டுக்கல்
- லட்சுமிபுரம்
- பிள்ளையார்நத்தம்
- சக்கையயநாயகனூர்
- நீலக்கோட்டை தாலுக்
- கலெக்டர்
- Poongodi
- நீலகோட்டை தாலூக் லக்ஷ்மிபுரம்
- பில்லியார் நாதம்
திண்டுக்கல், பிப். 7: விவசாய நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோரி, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவுக்குட்பட்ட லட்சுமிபுரம், பிள்ளையார்நத்தம் மற்றும் சக்கையநாயக்கனூர் பொதுமக்கள் கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நிலக்கோட்டை தாலுகா லட்சுமிபுரம், பிள்ளையார் நத்தம் மற்றும் சக்கையா நாயக்கனூர் கிராமத்தில் மின்சாரத்துறை சார்பில் விருதுநகர்-கோயம்புத்தூர் டவர் மின் கம்பி அமைப்பதற்கு, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணி நடைபெற்றது.
அப்போது எங்களது நிலத்தை ஆய்வு செய்து இழப்பீடு தொகை நிர்ணயம் செய்து விண்ணப்பம் வழங்கினர். மேலும் மின் கம்பி செல்லும் பாதையின் கீழ் உள்ள மரங்கள் மற்றும் பயிர்களை அதிகாரியின் அறிவுறுத்தலின்படி அகற்றிவிட்டோம். ஆனால் அதற்கான இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. நாங்கள் இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தோம். ஆனால் இன்னும் ஒப்புதல் வரவில்லை எனக் கூறி எங்களது நிலத்திற்கு இழப்பீடு வழங்காமல் உள்ளனர். எனவே இது தொடர்பாக கலெக்டர் விசாரணை செய்து, எங்களுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
The post விளைநிலத்திற்கு இழப்பீடு கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.