×

தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

மோகனூர், பிப்.7:நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையின் சார்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் ராஜா தலைமை வகித்து, தொழுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ -மாணவிகளுக்கு விநியோகித்தார். சிறப்பு அழைப்பாளராக மோகனூர் வட்டார மேற்பார்வையாளர் வேல்முருகன் கலந்து கொண்டு, தொழுநோய் குறித்தும், சந்தேகத்திற்குண்டான அறிகுறிகள் குறித்தும் விளக்கினார்.

மேலும், அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நகர் நல மையங்களில் சிகிச்சை எடுத்து குணமாக்கி விடலாம் என கூறினார். நிகழ்ச்சியில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியினை விலங்கியல் துறை மாணவ -மாணவிகள் எடுத்துக் கொண்டனர். விலங்கியல் துறை தலைவர் ராஜசேகர பாண்டியன், தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வெஸ்லி செய்திருந்தார்.

The post தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Namakkal District Health Department ,Arinagar Anna Government Arts College ,Namakkal ,Principal ,Raja ,
× RELATED தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு