×

ஜி.கே.எம். காலனி எரிவாயு தகனமேடை சீரமைப்பு பணி: நாளை முதல் இயங்காது

சென்னை: ஜி.கே.எம். காலனி மயான பூமியில் எரிவாயு தகனமேடை சீரமைப்பு பணி நாளை முதல் நடைபெற உள்ளதால் இயங்காது. எனவே, நேர்மை நகர் மயான பூமியை பயன்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-64க்குட்பட்ட ஜி.கே.எம். காலனி மயானபூமியில் உள்ள எல்பிஜி எரிவாயு தகனமேடை உடைந்து பழுதடைந்துள்ளது.

எனவே, புதியதாக எல்பிஜி எரிவாயு தகனமேடை பொருத்தும் பணி நாளை முதல் 29ம்தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, மேற்கண்ட நாட்களில் ஜி.கே.எம். காலனி மயானபூமி இயங்காது. எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாளை முதல் 29ம்தேதி வரையிலான நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-66க்குட்பட்ட நேர்மை நகர் மற்றும் வார்டு-67க்குட்பட்ட தாங்கல் மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஜி.கே.எம். காலனி எரிவாயு தகனமேடை சீரமைப்பு பணி: நாளை முதல் இயங்காது appeared first on Dinakaran.

Tags : G.K.M. Colony ,Chennai ,G.K.M. ,Colony ,Mayan Bhoomi ,Chennai Municipal Corporation ,Neramai Nagar Mayan Bhoomi ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...