×

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை பாதிப்பு


தாம்பரம்: செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி நேற்று காலை மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களிடையே ரயில் நின்றது. இதனால், காலை நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ – மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தொடர்ந்து, 10 நிமிடத்திற்கும் மேலாக மின்சார ரயில் நிறுத்தி வைக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பயணிகள் ரயிலில் இருந்து கீழே இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார ரயில் இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாலும், பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டதாலும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன. பின்னர், ரயில்வே ஊழியர்கள் மின்சார ரயிலில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்த பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

The post சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Chengalpattu ,Tambaram ,Guduvancheri ,Chennai ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!