×

பெங்களூருவில் போராட்டம் நடத்திய சம்பவம் சித்தராமையாவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பெங்களூரு: கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இருந்த போது, அரசுக்கு எதிராக கடந்த 2022ல் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இதில், அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பொது இடத்தில் போராட்டம் நடத்தியதன் மூலம் மக்களுக்கு இடையூறு செய்ததாக சித்தராமையா உள்ளிட்டோர் மீது ஐகிரவுண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக ஆஜராக தற்போது முதல்வராக உள்ள சித்தராமையாவுக்கு பெங்களூரு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து சித்தராமையா தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், வழக்கையும், நோட்டீசையும் ரத்து செய்ய நேற்று மறுத்தது. விசாரணை நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவு மதிக்காமல் அலட்சியம் காட்டியதற்காக சித்தராமையா உட்பட நான்கு பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

 

The post பெங்களூருவில் போராட்டம் நடத்திய சம்பவம் சித்தராமையாவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Siddaramaiah ,Bengaluru ,Bharatiya Janata Party ,Karnataka ,Congress ,Opposition ,
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...