×

மீண்டும் பொய் கணக்கு சொன்ன அண்ணாமலை இருக்கிறதே 9.5 லட்சம் அரசு வேலை எப்படி 2.3 கோடி பேருக்கு வாய்ப்பு: அமைச்சர் பிடிஆர் டேட்டா வைரல்

வேலூர் அணைக்கட்டு பகுதியில் சமீபத்தில், ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை மேற்கொண்ட பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ‘‘பாஜ ஆட்சி அமைந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். அரசு வேலை இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை நிச்சயம் வரும்’’ என கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது: ஓர் ஒப்பீட்டுக்கு- தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்.

பாஜக கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று? அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3ல் ஒருவருக்கு அரசு வேலையாம்! அல்லது வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப் போகிறார்களா?. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

The post மீண்டும் பொய் கணக்கு சொன்ன அண்ணாமலை இருக்கிறதே 9.5 லட்சம் அரசு வேலை எப்படி 2.3 கோடி பேருக்கு வாய்ப்பு: அமைச்சர் பிடிஆர் டேட்டா வைரல் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Minister ,PDR ,BJP ,president ,En Man En Makkal ,Vellore ,BJP government ,Dinakaran ,
× RELATED என்கவுன்டர் தொடர்பாக யார் மீது...