×

பாமக, தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதி ஓபிஎஸ், டிடிவி.தினகரனுக்கு நிபந்தனை: பாஜவின் புதிய வியூகம்

பாஜக கூட்டணியில் சேர டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விருப்பம் தெரிவித்தனர். இதனால் அவர்களிடம் விருப்ப பட்டியலை கேட்டுள்ளனர். இதனால் தனக்கு தேவையான 22 தொகுதிகளின் பட்டியலை பாஜக மேலிடத்தில் டிடிவி.தினகரன் ஒப்படைத்துள்ளார். டிடிவி தினகரனுக்கு 2 முதல் 5 தொகுதிகள் வரை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடமும் தொகுதிகளின் பட்டியலை கேட்டுள்ளனர். அவரும் தொகுதிக்கான பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் தனக்கு 11 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். கூட்டணியில் உள்ள மற்றவர்களுக்கு ஒன்று அல்லது 2 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க பாஜக விரும்பவில்லை. பாமக, தேமுதிக வந்தால் அவர்களுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளது.

இதனால் கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பட்டியலை வாங்கிய பிறகு கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை பாஜக மேலிடம் அறிவிக்கும். பாஜகவைப் பொறுத்தவரை பாமக, தேமுதிக வந்தால் அவர்களிடம் சீட் பேரம் நடத்தப்படும். மற்ற கட்சிகளுக்கு எத்தனை சீட், எந்த தொகுதி என்பதை பாஜக மேலிடம்தான் முடிவு செய்து அறிவிக்கும். நீங்கள் எங்களிடம் வந்து நிபந்தனை விதித்து பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தக்கூடாது என்று டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிறிய கட்சிகளிடம் கறாராக கூறிவிட்டனர். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்.

 

The post பாமக, தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதி ஓபிஎஸ், டிடிவி.தினகரனுக்கு நிபந்தனை: பாஜவின் புதிய வியூகம் appeared first on Dinakaran.

Tags : Bamakha ,OPS ,DTV.Thinakaran ,BJP ,DTV ,Dhinakaran ,O. Panneerselvam ,Dinakaran ,DTV Dinakaran… ,Bamaka ,Demuthika ,DTV Dinakaran ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...