×

சிலம்ப போட்டியில் வெற்றி: நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

நாசரேத், பிப். 7: பள்ளிக் கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தது. பல்வேறு பிரிவில் நடந்த போட்டியில், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர் தருண்சன் முதலிடம் பிடித்தார். 7ம் வகுப்பு மாணவர் சித்தார்த், 3ம் இடம் பெற்றார். 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 10ம் வகுப்பு மாணவர் கார்த்திக் 2ம் இடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் பாராட்டினார். நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குநர் பெலின் பாஸ்கர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், உடற்கல்வி ஆசிரியர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் சுதாகர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.

The post சிலம்ப போட்டியில் வெற்றி: நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Cymbal Competition ,Nazareth Markashis School ,Nazareth ,Department of School Education ,Level ,Silamba Competition ,Garappettai Girls Higher Secondary School ,Tuticorin ,Tarunsan ,Nazareth Markashis High School ,
× RELATED தமிழகத்தை வஞ்சித்த பாஜவை வீட்டுக்கு அனுப்புவோம்