×

ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் மேப்ட்ரீ ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியதுடன், எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் நாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில், வாகன உதிரிப் பொருட்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான கெஸ்டாம்ப் நிறுவனம், பொறியியல் வடிவமைப்பு மற்றும் தொழிற்கல்விக்கான கருவிகளை உற்பத்தி செய்யும் எடிபன் நிறுவனம், ரயில் உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான டால்கோ நிறுவனம், உயர்தொழில்நுட்ப உயிரியல் பொருள்களின் ஆராய்ச்சியையும் உற்பத்தியையும் மேற்கொள்ளும் மேப்ட்ரீ நிறுவனம் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த உயர் நிர்வாகிகளைச் சந்தித்து, வளமான வாயுப்புகள் உள்ள தமிழ்நாட்டில் நிலவும் தொழில் முதலீட்டுக்கான சூழல்களை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பின் பலனாக எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இச்சந்திப்பின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கைடன்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு,, முதல்வரின் செயலாளர் உமாநாத் ஆகியோர் உடனிருந்தனர்.

 

The post ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது appeared first on Dinakaran.

Tags : Edipan ,Spain ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,Gestamp ,Talco ,Maptree ,Tamil Nadu ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...