×

கன்னியாகுமரியில் மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

கன்னியாகுமரி, பிப்.7: மகாதானபுரம் கன்னியாகுமரி பப்ளிக் ஸ்கூல் மைதானத்தில் 16வது மாநில அளவிலான வான்காய் சிட்டோ ரியூ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றன . போட்டி துவக்க விழாவிற்கு கன்னியாகுமரி பப்ளிக் ஸ்கூல் முதல்வர் ஜிம்மி ஜோஸ்வா தலைமை வகித்தார்.காமன்வெல்த் கராத்தே பெடரேஷன் நடுவர் ராஜ் வரவேற்று பேசினார் . கன்னியாகுமரி பப்ளிக் ஸ்கூல் தாளாளர் கருணா டேவிட் போட்டியினை துவக்கி வைத்தார் .அஞ்சுகிராமம் சி.பி.எஸ்.இ ஸ்கூல் தாளாளர் தினு கோட்டக்கபரம்பில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

The post கன்னியாகுமரியில் மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி appeared first on Dinakaran.

Tags : State Level Karate Championship ,Kanyakumari ,16th Vankai Chito Ryu Karate Championship ,Kanyakumari Public School ,Mahathanapuram ,Principal ,Jimmy Joshua ,Commonwealth Karate… ,Kanyakumari State Level Karate Championship ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!