×
Saravana Stores

தேசியவாத காங்கிரஸ் அஜித்பவாருக்கு சொந்தம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசை கவிழ்த்து விட்டு, அந்த அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே பாஜவுடன் கூட்டணி அமைத்து முதல்வராக உள்ளார். கடந்த ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜித்பவார், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜ கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வராகியுள்ளார்.

இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் மனு செய்தனர். இதை விசாரித்த தேர்தல் ஆணையம், நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், அஜித்பவார் தரப்புதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவிதத தேர்தல் ஆணையம், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், சரத்பவார் அணியினர் தங்கள் அணிக்கு புதிய கட்சிப் பெயர் மற்றும் சின்னத்தை கோரி 3 விருப்பத் தேர்வுகளை இன்று மதியம் 3 மணிக்குள் தேர்தல் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சரத்பவார் தரப்புக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

The post தேசியவாத காங்கிரஸ் அஜித்பவாருக்கு சொந்தம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nationalist Congress ,Pawar ,Mumbai ,Uddhav Thackeray ,Maha Vikas Akadi ,Maharashtra ,Aknath Shinde Baja ,Nationalist Congress Party ,Ajit Pawar ,
× RELATED மகாராஷ்டிரா பேரவை தேர்தல் பாரமதி...