×

ஹாட்ரிக் வெற்றியுடன் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா

கான்பெரா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. மனுகா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச… வெஸ்ட் இண்டீஸ் 24.1 ஓவரில் வெறும் 86 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் அலிக் அத்தனேஸ் 32 ரன், சேஸ் 12, கீசி கார்ட்டி 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர்.

ஆஸி. பந்துவீச்சில் ஜேவியர் பார்ட்லெட் 4, லேன்ஸ் மோரிஸ், ஆடம் ஸம்பா தலா 2, அப்பாட் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆஸி. 6.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்து எளிதாக வென்றது. ஜாக் பிரேசர்-மெக்கர்க் 41 ரன் (18 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஹார்டி 2 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஜோஷ் இங்லிஸ் 35 ரன் (16 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஸ்மித் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை ஜேவியர் பார்ட்லெட் தட்டிச் சென்றார்.

* இந்த போட்டி வெறும் 31 ஓவரில் முடிவுக்கு வந்தது (186 பந்து). ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் முடிவுக்கு வந்த போட்டி இதுதான். முன்னதாக, 2013ல் பெர்த்தில் இதே அணிகளிடையே நடந்த போட்டி 199 பந்தில் முடிந்தது.

* ஆஸ்திரேலியா 259 பந்துகளை மீதம் வைத்து வென்றது.

The post ஹாட்ரிக் வெற்றியுடன் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Tags : Australia ,West Indies ,Canberra ,Manuka Oval ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...