×

பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 15 மாணவர்கள் காயம்

கோலார்: பள்ளி வாகனம் கவிழ்ந்து 15 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா டவுன் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால் இவர்களை தினமும் பள்ளி வாகனத்தில் அழைத்து வந்து மறுபடியும் அழைத்து சென்று விடுவது வழக்கம். இதே போல் நேற்று காலை வழக்கம் போல் மாணவர்கள் வாகனத்தில் ஏற்றி பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது சிகேனஹள்ளிகேட் அருகே வாகனம் வேகமாக வந்துக்கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதை பார்த்தவர்கள் மாணவர்களை மீட்டு கோலார் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முல்பாகல் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 15 மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Kolar ,Mulbagal taluka ,Dinakaran ,
× RELATED கர்நாடகா கோலார் மாவட்டத்தில் வாங்கிய...