×

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்குவது எப்போது?: சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு

நாகை: கை- இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்தை துவக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த நவம்பர் மாதம் பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஒன்றிய அரசு தொடங்கியது. இந்த கப்பல் போக்குவரத்து இரண்டு நாடுகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. பயணிகள் இரு நாடுகளுக்கும் சென்று வந்தனர்.

இந்நிலையில் இயற்கை இடர்பாடு காரணமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இயற்கை இடர்பாடுகள் குறைந்த பின் ஜனவரி மாத இறுதியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் பிப்ரவரி மாதம் தொடங்கி ஒரு வார காலம் ஆகியும் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது சுற்றுலா பயணிகள், வர்த்தகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

எனவே மீண்டும் கப்பல் போக்குவரத்தை துவக்க வேண்டும் என்று வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், மிகவும் பின்தங்கிய மாவட்டமான நாகையில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது போது மகிழ்ச்சி அடைந்தோம். இனி நாகையில் வர்த்தகம் பெருகும் என எண்ணி இருந்தோம். ஆனால் குறுகிய காலத்திலேயே கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது.

மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்றனர்.

The post நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்குவது எப்போது?: சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nagai-Sri Lanka ,Nagai ,Kai ,Sri Lanka ,Union Government ,Gai ,Lankan Congessian ,Nagai- ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...