×

ஒரு டஜன் ‘மான்குராட்’ மாம்பழம் ரூ.7000: கோவாவில் விற்பனை

பனாஜி: கோவாவில் ஒரு டஜன் ‘மான்குராட்’ மாம்பழம் ரூ.7,000 ஆக விற்கப்பட்டது. கோவா மாநிலத்தில் விளையும் ‘மான்குராட்’ மாம்பழம் மிகவும் ருசியாக இருக்கும். பனாஜி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட ‘மான்குராட்’ மாம்பழத்தின் விலை அதிகமாக இருந்தது. ஒரு டஜன் (12 எண்ணிக்கை) மாங்குராட் மாம்பழம் ரூ.7,000 ஆக விற்கப்பட்டது.

கடந்த ஆண்டு இதே சீசனில் ஒரு டஜன் மாம்பழம் ரூ.6 ஆயிரம் விலைக்கு விற்கப்பட்டது. பொதுவாக இந்த வகை மாம்பழங்கள் கோடையின் தொடக்கத்தில் சந்தைக்கு வரும். ஆனால் இந்த வருடம் சற்று முன்னதாகவே வந்துவிட்டதாக வியாபாரிகள் கூறினர்.

The post ஒரு டஜன் ‘மான்குராட்’ மாம்பழம் ரூ.7000: கோவாவில் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Goa ,Panaji ,PANAJI MARKET ,
× RELATED ஜூலை மாதத்திற்குள் 10-15 மாநிலங்களில்...