×

மாணவர்கள் ஓடும் ரயிலில் ஏறி அபாயகர பயணம் எஸ்பி நேரில் அழைத்து அறிவுரை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை ரயில்நிலையத்தில் ஒரு பள்ளி மாணவன் மற்றும் மாணவி ஓடும் ரயிலில் அபாயகரமாக ஏறியும், நடைமேடையில் கால்களை தேய்த்தபடியும் பயணம் செய்தனர். இந்த ஆபத்தான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இது சம்பந்தமாக கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த அந்த மாணவரையும், மாணவியையும் மற்றும் அவர்களது பெற்றார்களையும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் அழைத்து அவர்களது ஆபத்தான பயணம் குறித்து விளக்கி அறிவுரைகளை வழங்கினார். மேலும், அவர்களின் எதிர்கால கனவு குறித்து மாவட்ட எஸ்பி வருண்குமார் கேட்ட போது அந்த மாணவர் தான் ஒரு போலீஸ் டிஎஸ்பி ஆகப்போவதாகவும், அந்த மாணவி தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக விரும்புவதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எஸ்பி வருண்குமார் அந்த 2 பேரும் வருங்காலத்தில் சிறப்பாக படிக்க ஆலோசனைகள் வழங்கி அனுப்பி வைத்தார்….

The post மாணவர்கள் ஓடும் ரயிலில் ஏறி அபாயகர பயணம் எஸ்பி நேரில் அழைத்து அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Kavarappettai ,Tiruvallur district ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி மையங்களில் 100% மாணவர் சேர்க்கை : கலெக்டர் அறிவுறுத்தல்