×

பச்சை மிளகாய் தொக்கு

தேவையானவை:

பச்சை மிளகாய் – 100 கிராம்,
கல் உப்பு – தேவைக்கு,
புளி – எலுமிச்சை அளவு,
வெல்லம் பொடித்தது – 100 கிராம்,
நல்லெண்ணெய் – 100 மில்லி,
கடுகு, பெருங்காயம் தாளிக்க – சிறிதளவு.

செய்முறை:

பச்சை மிளகாயை காம்பு நீக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து பச்சை மிளகாயை லேசாக வதக்கவும். பின் பச்சை மிளகாய், உப்பு, புளி இவற்றை நைசாக அரைக்கவும். அரைத்த விழுதுடன் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்துப் பின் விழுதைச் சேர்த்து சிறு தீயில் சுருள வரும் வரை வதக்கி இறக்கவும். இந்த ‘பச்சை மிளகாய் தொக்கு’ காரம், புளிப்பு, இனிப்பு எல்லாம் சேர்ந்து இருப்பதால் சாப்பிட சுவையாய் குளிருக்கு இதமாய் இருக்கும்.

The post பச்சை மிளகாய் தொக்கு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...