×

ஓடும் பேருந்தில் இருந்து பெண் பயணி கீழே விழுந்த விவகாரம்: பணிமனை கிளை மேலாளர் உட்பட அனைவரும் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: சென்னையில் ஓடும் பேருந்தில் இருந்து பெண் பயணி கீழே விழுந்த விவகாரம் தொடர்பாக பணிமனை கிளை மேலாளர் உட்பட அனைவரும் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை திருவேற்காட்டில இருந்து வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்து அமைந்தகரை அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பேருந்தின் பின் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணி கீழே சறுக்கியபடி விழுந்தார்.

சறுக்கியடி கீழே விழுந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பேருந்தின் ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் சிறிது தூரம் தொங்கியபடியே சென்றுள்ளார். இதையடுத்து பெண் பயணியை பேருந்தில் இருந்தவர்களும், அக்கம்பக்கத்தினரும் சென்று உடனடியாக மீட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

பேருந்தின் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையியல் பெண் பயணி கீழே விழுந்த விவகாரம் தொடர்பாக பணிமனை கிளை மேலாளர் உட்பட அனைவரும் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post ஓடும் பேருந்தில் இருந்து பெண் பயணி கீழே விழுந்த விவகாரம்: பணிமனை கிளை மேலாளர் உட்பட அனைவரும் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Municipal Transport Corporation ,Thiruvekkad, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் இயற்கை எரிவாயு மூலம்...