×

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம்: மும்பை ஐகோர்ட்

மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இய்க்குனர் மற்றும் தலைவராக பொறுப்பேற்ற சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்துக்கு விதிமுறைகளைப் பின்பற்றாமல் கடன் வழங்கியதாகவும். இந்தக் கடனில் கணிசமான தொகை வீடியோகான் நிறுவனத்திலிருந்து சுப்ரீம் எனர்ஜி மற்றும் நியு பவர் ரெனிவபில்ஸ் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.

இவ்வாறு தொடர்ந்து சுய ஆதாயத்துக்காக வங்கியின் பணத்தை வீடியோகான் நிறுவனம் மூலமாக கணவரின் நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யும் வகையில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்துள்ளதாக குற்றசாட்டு வைக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு எழுந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட பிறகு சந்தா கோச்சார் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் வங்கி இயக்குநர் குழு அவரை பணிநீக்கம் செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மேலும் கடன் பெற தகுதியில்லாத வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதன் மூலம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் ரூ.64 கோடி பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது . 2022ம் ஆண்டு டிச.23ம் தேதி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கை சிபிஐ கைது செய்தது. வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு சந்தா கோச்சார், அவரது கணவருக்கு வழங்கிய இடைக்கால ஜாமினை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது.

The post ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம்: மும்பை ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : ICICI Bank ,Santa Kochhar ,Deepak ,CBI ,Mumbai ,ICourt ,C.I.C. ,Bombay High Court ,Santa Kochar ,CPI ,Sundah Kochar ,Managing Director ,Former ,C.I. ,Oh ,Chanda Kochar ,Mumbai Icourt ,Dinakaran ,
× RELATED இறங்குமுகம் காணும் பங்குச்சந்தை...