×

நம் பந்துவீச்சாளர்கள் அபாரமானவர்கள்; பேட்டிங்கை பலப்படுத்த நல்ல மைதானங்கள் அமைக்க வேண்டும்: பிசிசிஐக்கு கங்குலி யோசனை

மும்பை : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது:-பும்ரா, சமி, சிராஜ், முகேஷ்குமார் ஆகியோர் பந்து வீசுவதை நான் பார்க்கிறேனோ அப்போதெல்லாம் இன்னுமா நமக்கு சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் தேவை என்று யோசனை வருகிறது. மேலும் இந்தியாவில் இனிமேல் பிசிசிஐ நல்ல ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கி வருகிறது. நீங்கள் எந்த ஒரு ஆடுகளத்தை கொடுத்தாலும் நமது இந்திய பவுலர்கள் 20 விக்கெட்டை நிச்சயம் எடுத்துக் கொடுப்பார்கள்.

அதிலும் அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்சர் பட்டேல் ஆகியோர் இந்த வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்தால் நிச்சயமாக கிரிக்கெட் வேட்டை நடக்கும். ஆனால் என் கவலையே இந்தியாவில் பேட்டிங் தரம் மிகவும் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக நமது சொந்த ஊரில் பயன்படுத்தப்படும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தான். எந்த ஒரு வீரர்களாலும் சரியாக விளையாட முடியவில்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு நாம் ஒரு நல்ல ஆடுகளத்தை தயார் படுத்த வேண்டும். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை உருவாக்கினால் தான் இளம் வீரர்கள் அதில் நன்றாக விளையாடி ரன்கள் அடிப்பார்கள். மேலும் ஐந்து நாட்கள் போட்டி நிச்சயம் நடைபெறும். இறுதியில் இந்தியா வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நம் பந்துவீச்சாளர்கள் அபாரமானவர்கள்; பேட்டிங்கை பலப்படுத்த நல்ல மைதானங்கள் அமைக்க வேண்டும்: பிசிசிஐக்கு கங்குலி யோசனை appeared first on Dinakaran.

Tags : Ganguly ,BCCI ,Mumbai ,Bumrah ,Shami ,Siraj ,Mukesh Kumar ,India ,Dinakaran ,
× RELATED ஜெய்ஷா தலைமையிலான பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது!