×

ரூ.20 ஆயிரம் கோடி குவித்த கோவை மோசடி நிறுவனம் புதுகட்சி துவங்கப் போகிறதாம்: பரபரப்பு தகவல்கள்

கோவை: வையில் உள்ள மைவி 3 ஆட்ஸ் என்ற எம்எல்எம் ஆன்லைன் நிறுவனம் மீது பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி புகார்கள் குவிந்தன. இது குறித்து கோவை போலீசார் வழக்குப்பதிந்தனர். இதன் உரிமையாளரான பீளமேடு சத்தி ஆனந்தன்(36) மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் நேற்று சத்தி ஆனந்தன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மாநகர குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பு வக்கீல் ஆர்டி விஜய் ஆனந்த் இன்று பல பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது: இந்த நிறுனத்தை சத்தி ஆனந்தன் தொடங்கவில்லை. நெல்லை மாவட்டம் ஏனாந்தாள் சேர்ந்த விஜயராகவன் (43). இவரது சகோதரி குமாரி, சிவசங்கர் ஆகியோர் இதனை தொடங்கினர். அப்போதே மோசடி புகார்கள் எழுந்தன. போலீசார் விசாரித்ததில் சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக தகவல்கள் வெளியானது. இதனால் விஜயராகவன் நிறுவனத்தை சத்தி ஆனந்தனிடம் ஒப்படைத்தார். அவர் இதற்கு பினாமியாக செயல்பட்டு வருகிறார்.

அதன்பின்னர் மைவி 3 ஆட்ஸ் நிறுவனம் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான வகையில் களம் இறங்கியது. வசியமாத்திரை, ஆயுர்வேத மாத்திரை, கமிஷன் என பல்ேவறு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து மோசடி ெசய்துள்ளது.இதன் உரிமையாளர் விஜயராகவன், சத்தி ஆனந்தன் ஆகியோர் ஆன்லைனில் தோன்றி நாம் தமிழகத்தில் விரைவில் புதிய கட்சி ெதாடங்குவோம் என்று கூறி உற்சாகப்படுத்தியுள்ளனர். அ

தற்கான வீடியோக்கள் உள்ளன. லும் டீம் லீடராக பதவி உயர்வு பெறுபவர்களை கோவா அழைத்துச்சென்று ஸ்டார் ஓட்டலில் தங்க வைத்து உல்லாச வாழ்க்கையில் திளைக்க வைத்துள்ளனர். விஜயராகவன் மொரிஷியசில் தனித்தீவு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ரூ.20 ஆயிரம் கோடி குவித்த கோவை மோசடி நிறுவனம் புதுகட்சி துவங்கப் போகிறதாம்: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Myv3Ads ,Vai ,Coimbatore police ,Singhanallur police ,Peelamedu Satthi Anandan ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...