×

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கூட்டம்: மேற்குவங்க முதல்வர் திடீர் புறக்கணிப்பு

கொல்கத்தா: இன்று நடக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பங்கேற்க இருந்த நிலையில், திடீரென அவர் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று டெல்லி வருவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் தனது பயணத்தை ரத்து செய்தார்.

மேற்குவங்க பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளதால், அவர் டெல்லியில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தான் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து, ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தெரிவித்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்த கூட்டத்தில், மம்தாவுக்கு பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சுதீப் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

The post ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கூட்டம்: மேற்குவங்க முதல்வர் திடீர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : One Nation One Election ,West Bengal ,CM ,Kolkata ,Chief Minister ,Mamata ,One Nation, One Election ,Trinamool Congress ,President ,Mamata Banerjee ,Dinakaran ,
× RELATED சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ...