×

மத்திய பிரதேசத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி: 100 பேர் காயம்

போபால்: மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பட்டசுகள் வெடித்து சிதறியது. அருகில் இருந்த 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீபரவியதால் அங்கு பதற்றம் நிலவியது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உதவிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையையும் அழைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரிஷி கர்க் தெரிவித்தார்.

தீ விபத்து சம்பவம் நடந்தபோது சுமார் 150 தொழிலாளர்கள் வளாகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட பட்டாக ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ம.பி. முதல்வர் மோகன் யாதல் கூறியுள்ளார்.

The post மத்திய பிரதேசத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி: 100 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Bhopal ,Hartha, Madhya Pradesh ,
× RELATED ஒன்றிய அரசு திட்டத்தின் பெயரை...