×

பட்டத்தை துறந்த அழகி: தோற்றத்தை பற்றி பலர் அதிருப்தி தெரிவித்த நிலையில் ஜப்பான் அழகி கரோலினா ஷினோ அறிவிப்பு

ஜப்பான்: ஜப்பான் அழகி பட்டத்தை வென்ற இளம்பெண் கரோலினா ஷினோ, தன் அழகி பட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார். மிஸ் ஜப்பான் 2024 கரோலினா ஷினோ உக்ரைனில் வசிக்கும் 26 வயதான மாடல் அழகி. ஐந்து வயதில் ஜப்பானுக்கு குடிபெயர்ந்து, நகோயாவில் வளர்க்கப்பட்டார். போட்டியில் வென்ற இவர் ஜப்பானிய குடிமகனாக இருந்தாலும், அவரது தோற்றம் ஐரோப்பியரைப் போல இல்லாததால் கேள்விகள் எழுந்தன.

உக்ரேனிய நாட்டில் பிறந்த மாடல் அழகி, மிஸ் ஜப்பானாக தேர்ந்தெடுக்கபட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவர் ஜப்பானிய மொழியில் பேசுகிறார் என்றாலும், ஐரோப்பிய தோற்றம் தொடர்பாக சர்ச்சைகளில் சிக்கினார். அவரது வெற்றியைப் ஜப்பானிய மக்கள் மகிழ்ச்சியடையவில்லை. மிஸ் ஜப்பான் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஜப்பானியர் அல்ல உக்ரைனியர்.

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கரோலினா, “ஜப்பானியராகத் தெரியவில்லை” என்றாலும், ஜப்பானில் வளர்ந்ததால் அவரது மனம் “ஜப்பானியராகிவிட்டது” என்று தெரிவித்திருந்தார். மிஸ் ஜப்பான் 2024 பட்டத்தை வெல்வது “வாழ்நாள் கனவு” என்று கூறினார். “இந்தப் போட்டியில் ஜப்பானியராக அங்கீகரிக்கப்பட்டது என்னை நன்றியுணர்வுடன் நிரப்புகிறது,” என்று கரோலினா கூறினார்.

இந்நிலையில் உக்ரைனில் பிறந்தவரான கரோலினா ஷினோவின் தோற்றம், ஜப்பானியர் போலல்லாமல் ஐரோப்பியர் போல் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. உக்ரைனில் பிறந்து ஜப்பானில் வளர்ந்தவராக இருந்த போதிலும் கரோலினா ஷினோவின் தோற்றம் பற்றி பலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். திருமணமான மருத்துவர் ஒருவருடன் கரோலினாவுக்கு தொடர்பு உள்ளதாக பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கரோலினாவின் பூர்வீகமும் தனிப்பட்ட வாழ்க்கையும் சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து அழகி பட்டத்தை திருப்பி அளித்துவிட்டார்.

The post பட்டத்தை துறந்த அழகி: தோற்றத்தை பற்றி பலர் அதிருப்தி தெரிவித்த நிலையில் ஜப்பான் அழகி கரோலினா ஷினோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Carolina Shino ,Japan ,Karolina Shino ,Ukraine ,Nagoya.… ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...