×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மகளின் திருமண விழாவில் விருந்தினர்களுக்கு ஹெல்மெட் வழங்கிய தந்தை

கோர்பா: உயிர் என்பது விலைமதிப்பற்றது என்றும், குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் விருந்தினர்களை பெண்ணின் தந்தை கேட்டுக்கொண்டார். திருமண விழாவில் பங்கேற்பவர்களுக்கு திருமண வீட்டார் விருந்து கொடுத்து உபசரிப்பதுடன், தாம்பூல பைகள் கொடுப்பது வழக்கம். வசதியைப் பொறுத்து இந்த தாம்பூல பைகளில் உள்ள பொருட்கள் மாறுபடும். வெற்றிலை பாக்குடன் அவர்களின் வசதிக்கு ஏற்ப இனிப்பு வகைகள் மற்றும் பரிசுப்பொருட்களை வைத்து வழங்குகிறார்கள். சிலர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான தாம்பூலப் பைகளை வழங்குகின்றனர்.

அவ்வகையில், சத்தீஷ்கர் மாநிலம் கோர்பா நகரைச் சேர்ந்த சேத் யாதவ் என்பவர், தன் மகளின் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு ஹெல்மெட்டுகளை வழங்கியிருக்கிறார். அத்துடன் தன் சாலை பாதுகாப்பு தெடார்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் இந்த பரிசுகளை வழங்கியதாக தெரிவித்தார்.

இதுபற்றி சேத் யாதவ் கூறுகையில், ‘என் மகளின் திருமணம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த நிகழ்வாக அமைய வேண்டும் என விரும்பினேன். உயிர் என்பது விலைமதிப்பற்றது என்றும், குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் விருந்தினர்களை கேட்டுக்கொண்டேன். அத்துடன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குடும்பத்தினர் 12 பேர் ஹெல்மெட் அணிந்தபடி நடனம் ஆட முடிவு செய்தோம். இருசக்கர வாகனங்களில் வந்திருந்த 60 பேருக்கு இனிப்புகளுடன் ஹெல்மெட் வழங்கினேன் என்றார் தெரிவித்துள்ளார்.

The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மகளின் திருமண விழாவில் விருந்தினர்களுக்கு ஹெல்மெட் வழங்கிய தந்தை appeared first on Dinakaran.

Tags : Road Safety Awareness ,Korba ,Tambula ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி