×

கர்நாடக முதல்வர் சித்தராமையா மார்ச் 6ம் தேதி நேரில் ஆஜராக கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்நாடக: கர்நாடக முதல்வர் சித்தராமையா மார்ச் 6ம் தேதி நேரில் ஆஜராக கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2022ல் முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை வீட்டை முற்றுகையிட முயன்ற வழக்கு, சித்தராமையா உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்ட நிலையில, வழக்கை தள்ளுபடி செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளர்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கூறி மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்தராமையா உள்ளிட்டோருக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சந்தோஷ் என்பவர் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உடுப்பியில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் உயிரிழப்பதற்கு முன்பாக பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் அந்த கடிதத்தில் அப்போதைய கிராம வளர்ச்சிதுறை அமைச்சராக இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்ப இந்த கட்டுமானப்பணிகள் ஈடுப்படுவதற்கு 40% கமிஷன் கேட்டதாக ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார், இந்த நிலையில் அவருடைய உயிரிழப்பின் காரணத்திற்கு கமிஷன் விவகாரம் தான் கரணம் என காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து ஈஸ்வரப்ப அவரது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். அனாலும் இதனை விடாமல் காங்கிரஸ் ஈஸ்வரப்பாவை கைது செய்யவேண்டும் என்று தலைமை செயலகமான விதான சவுதாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட முயன்றனர்.இந்த போராட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, ராமலிங்க ரெட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள், போலீசார் அவர்களை தடுக்க முயன்ற போது அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர் போலீசார் அவர்களை கைது செய்து கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சித்தராமையா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்வதாகவும் சட்டத்தின் முன்பு அனைவரும் ஒன்றுதான் எனவே அமைச்சர் ராமலிங்க ரெட்டி மார்ச் 7ல் நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சித்தராமையா பொறுத்தவரையில் மார்ச் 6ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post கர்நாடக முதல்வர் சித்தராமையா மார்ச் 6ம் தேதி நேரில் ஆஜராக கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Karnataka High Court ,Karnataka ,Chief Minister Siddaramaiah ,Sidharamaya ,Basavaraj ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...