×

கத்தாளம்பட்டி கிராமத்தில் பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்

*தொற்றுநோய் ஏற்படும் அபாயம்

சாத்தூர் : பள்ளி அருகே கழிவு நீர் தேங்கியிருப்பதால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது.சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளியின் முன்பாக செல்லும் கழிவு நீர் பாதையை சரியாக பராமரிக்காமல் உள்ளனர். இதனால் கத்தாளம்பட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பள்ளியின் அருகே பல மாதங்களாக தேங்கியுள்ளது.

கழிவு நீர் தேங்கியிருப்பதால் அதில் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post கத்தாளம்பட்டி கிராமத்தில் பள்ளி அருகே தேங்கி நிற்கும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Tags : Kattalampatti ,Chatur ,Kattalambatti village ,Chattur ,Kattalampatti village ,Dinakaran ,
× RELATED தீப்பெட்டியை எரிக்கும் சீன லைட்டர்கள்