×

மரக்காணத்தில் பருவம் தவறி கடந்த மாதம் கொட்டிய மழையால் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தி மீண்டும் தொடக்கம்..!!

விழுப்புரம்: மரக்காணத்தில் பருவம் தவறி கடந்த மாதம் கொட்டிய மழையால் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தி தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டு தோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும்,மறைமுகமாகவும் சுமார் 2000 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் பருவம் தவறி கடந்த மாதம் கொட்டிய மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கிருந்த அலங்கல்களில் தேங்கிய உபரி நீர் தற்போது வடிய தொடங்கியிருப்பதால் தற்போது தொழிலாளர்கள் உப்பு உற்பத்திக்கான பணிகளை தொடங்கியுள்ளனர். மீண்டும் மழை பெய்யாமல் இருந்தால் அடுத்த 20 நாட்களுக்குள் உற்பத்தி தொடங்கும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே அரசின் மழைக்கால நிவாரண தொகை ஒரு சிலருக்கு கிடைக்கவில்லை என்று அந்த பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

The post மரக்காணத்தில் பருவம் தவறி கடந்த மாதம் கொட்டிய மழையால் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தி மீண்டும் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Marakana ,Villupuram ,Marakanam ,Villupuram district ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் அருகே தற்கொலை...