×

விசாரணை அமைப்புகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியை அடக்க முடியாது: அமைச்சர் அதிஷி பேச்சு

டெல்லி: விசாரணை அமைப்புகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியை அடக்க முடியாது என டெல்லி மாநில நிதி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி நிர்வாகிகள் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இது குறித்து டெல்லி மாநில நிதி அமைச்சர் அதிஷி கூறுகையில்; ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடையவர்கள் மீது ED ரெய்டுகள் நடந்து வருகிறது. மத்திய அமைப்புகள் மூலம் எங்கள் கட்சியை அடக்க பாஜக விரும்புகிறது. விசாரணை அமைப்புகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியை அடக்க முடியாது. கடந்த 2 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தற்போது வரை ஒரு ரூபாய் கூட அமலாக்கத்துறையினரால் மீட்க முடியவில்லை. அமலாக்கத்துறையால் எந்த விதமான ஆதாரங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை இவ்வாறு கூறினார்.

The post விசாரணை அமைப்புகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியை அடக்க முடியாது: அமைச்சர் அதிஷி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Yes Atmi Party ,Minister ,Adashi ,Delhi ,State Finance ,Chief Minister ,Arvind Kejriwal ,Dinakaran ,
× RELATED மதுபான கொள்கை ஊழல் வழக்கு; டெல்லி...