×

பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்க்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்

லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் சார்ந்த பணிகள் ஒத்திவைக்கபடுவதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

75 வயதான மன்னர் சார்லஸ், கடந்த மாதம் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவருக்கு பரிசோதனை செய்யபட்டதில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. ஆனால் மன்னருக்கு எத்தகைய புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து அரண்மனை தகவல் வெளியிடவில்லை.

மன்னருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைந்து மக்கள் சார்ந்த பணிகளை விரைவில் மேற்கொள்வார் எனவும், அவருக்குப் பதிலாக அரச ஆலோசகர்களை நியமிக்கத் திட்டம் ஏதும் இல்லை என்று அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்க்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் appeared first on Dinakaran.

Tags : Britain ,King Charles III ,Buckingham Palace ,London ,Great Britain ,King Charles ,
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...