- உத்தராகண்ட் மாநில சட்டமன்றம்
- டெஹ்ராடூன்
- பாஜக
- உத்தரகண்ட் சட்டமன்றம்
- புஷ்கர் சிங் தாமி
- முதல் அமைச்சர்
- உத்தரகண்ட்...
- தின மலர்
டெஹ்ராடூன் : பாஜக ஆட்சியில் உள்ள உத்தராகண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் டேராடூனில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் பொறுப்பேற்ற போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவினர் பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் ஆலோசனைகளை பெற்று பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை தயார் செய்தனர். பொது சிவில் சட்டம் தொடர்பான இந்த குழு முதல்வர் புஷ்கர்சிங் தாமியிடம் இறுதி அறிக்கயை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பொது சிவில் சட்ட மசோதா தயார் செய்யப்பட்டு மாநில அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.
இதனையடுத்து இன்று பொதுசிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் சட்டசபையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ரஞ்சனா பிரகாஷ் தேசாய் குழு ஆய்வு செய்தது.தேசாய் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் பொது சிவில் சட்ட மசோதா பேரவையில் தாக்கலாகிறது. பொது சிவில் சட்ட மசோதா தாக்கலாக உள்ள நிலையில் டேஹ்ராடூனில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post உத்தராகண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று தாக்கல்: டேராடூனில் 144 தடை உத்தரவு appeared first on Dinakaran.