×

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன.

இது தொடர்பாக சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு 5 முறை சம்மன் அனுப்பியும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அமலாக்கத்துறை சோதனைக்கு உத்தரவிடபட்டுள்ளது. இதை தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமார் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் மொத்தம் 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெறுகிறது.

The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Aravind Kejriwal ,AADMI ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...