×

பட்டாசு திரி பறிமுதல்

 

விருதுநகர், பிப்.6: டூவீலரில் கடத்திய பட்டாசு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் அருகே தாதம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் சூலக்கரை போலீஸ் எஸ்ஐ நிவாசன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது டூவீலரில் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பயன்படும் 15 கட்டுகளில் 30 குரோஸ் வெள்ளை திரியை திருத்தங்கல் இந்திரா காலனியை சேர்ந்த பாலு(39) கொண்டு சென்றார். சூலக்கரை போலீசார் பாலுவை கைது செய்து டூவீலர் மற்றும் பட்டாசு திரியை பறிமுதல் செய்தனர்.

The post பட்டாசு திரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sulakarai Police SI Nivasan ,Dadampatti ,Dinakaran ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...