×

தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்த நீதிபதி உதவி

 

திருப்பூர், பிப்.6:பண்ருட்டியை சேர்ந்தவர் கோதலட்சுமி.இவர் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். கோதலட்சுமியின் தந்தை சிறு வயதில் இறந்த நிலையில், தாயார் கூலி வேலை செய்து வந்தார். இதில் கிடைக்கிற வருமானத்தில் இளநிலை பட்டப்படிப்பை கடலூர் மாவட்டம் வடலூரில் கோதலட்சுமி முடித்தார்.இதனிடையே திருப்பூர் குமரன் கல்லூரியில் மைக்ரோ பயாலஜி துறையில் முதுநிலைப் பட்டம் படிக்க விண்ணப்பித்துள்ளார். 2 வருட படிப்பிற்கு கல்வி தொகையில் 6 மாதம் மட்டுமே செலுத்திய நிலையில், மீதமுள்ள தொகை செலுத்த முடியாமல் படிப்பை கை விடும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேசுக்கு மாணவி தனது நிலை குறித்தும், கல்வி தொகை செலுத்த பணம் தேவை எனவும் கடிதம் எழுதினார்.இதனை அவர் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜனுக்கு அனுப்பினார்.அதன்படி கடிதத்தை பெற்ற நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் மாணவி கல்வி தொகைக்கான கட்டணத்தை கல்லூரியில் செலுத்தி அதற்கான ரசீதை முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் மாணவி கோதலட்சுமியிடம் வழங்கினார்.

The post தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்த நீதிபதி உதவி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Kothalakshmi ,Panrutti ,Tirupur Kumaran Women's College ,Godalakshmi ,Vadalur, Cuddalore district ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி பெறலாம்