- திருவாரூர் புத்தக திருவிழா
- திருமூர்த்தபோண்டி
- திருத்துறைப்பூண்டி பேரூராட்சி
- பாலம் சேவா கர்போரெஷன்
- திருவாரூர்
திருத்துறைப்பூண்டி, பிப்.6: திருவாரூரில் நடந்து வரும் இரண்டாவது புத்தக திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொள்ளும் விதமாக திருத்துறைப்பூண்டி நகராட்சி, பாலம் சேவை நிறுவனம் இணைந்து 24-வார்டுகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு ஒவ்வொரு வார்டுகளிலும் வீடு வீடாக சென்று நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர். இதுகுறித்து நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கூறுகையில், கடந்தாண்டு நடந்த முதலாவது புத்தக திருவிழாவில் நல்லமுறையில் விழிப்புணர்வு செய்யப்பட்டதால் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்தாண்டு கடந்த ஒரு வாரமாக அனைத்து வார்டுகளிலும் வீடுகளுக்கு சென்று கவுன்சிலர்கள், தன்னார்வலர்கள் மூலம் துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துக்கொள்ள உள்ளனர். தேவையான புத்தகங்களை அதிகளவு வாங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 16 வார்டுகளில் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்று கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். இன்னும் சில நாட்களில் சுமார் இருபதாயிரம் பேர் சென்று கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்துடன் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ், பொறியாளர் பிரதான் பாபு, பாலம் சேவை நிறுவனச் செயலாளர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் ரமேஷ்குமார், கார்த்தி, லட்சுமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
The post திருவாரூர் புத்தக திருவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் appeared first on Dinakaran.