×

தஞ்சாவூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

 

தஞ்சாவூர், பிப்: 6: தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் கல்லூரியிலிருந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நேற்று மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு குந்தவை நாச்சியார் கல்லூரியிலிருந்து ராமநாதபுரம் ரவுண்டானா வழியாக குந்தவை நாச்சியார் கல்லூரி வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் நேற்று கலந்து கொண்டனர். இப்பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை மாணவிகள் கைகளில் ஏந்தி கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி சாலை பாதுகாப்பின் முக்கியத்தும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்கள் அனைவரும் ஹெல்மெட் பயன்படுத்துகிறார்களா? எனவும், இரு சக்கர வாகனங்களுக்கு உரிமம் வைத்திருக்க வேண்டும் எனவும். சாலைகளை பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்ட வேண்டுமெனவும் அறிவுறுத்தினர்.
இதுபோன்ற சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அனைத்து பொதுமக்களும் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார்.இப்பேரணியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் செந்தில்குமார், புவனேஸ்வரி. உதவி கோட்ட பொறியாளர்கள் கீதா, பிலீப், உதவி பொறியாளர்கள் விஜய், மோகனா, கல்லூரி முதல்வர் ஜான்பீட்டர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : safety awareness ,Thanjavur College ,Thanjavur ,District Collector ,Deepak Jacob ,National Road Safety Awareness Rally ,Highways Department ,Kundavai Nachiar College ,Thanjavur District Highway Department ,Thanjavur Road Safety Awareness Rally College Girls ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...