×

காலி பாட்டில் வியாபாரிகள் சங்க கூட்டம்

ஈரோடு, பிப்.6: ஈரோடு மாவட்ட காலி பாட்டில் வியாபாரிகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். இதில், அரசு டாஸ்மாக் பார் சில்லரை விற்பனை காலி பாட்டில் டெண்டர் சம்மந்தமாக கருத்து கேட்டு, சங்கம் எடுக்கும் முடிவுக்கு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் காலி பாட்டில் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post காலி பாட்டில் வியாபாரிகள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Empty Bottle Traders Association ,Erode ,Erode District Empty Bottle Traders Welfare Association ,Ganesan ,Government Tasmac Bar Retailer ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...