×

மது விற்ற பெண் உட்பட 10 பேர் கைது

ஈரோடு, பிப். 6: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்கு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். இதில், டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக பங்களாபுதூரில் முத்தழகன் (24), பஞ்சையப்பன் (27), வடிவேல் மனைவி காஞ்சனா(48), அம்மாபேட்டையில் மகாலிங்கம்(51), அந்தியூரில் சின்னசாமி (54), பெருந்துறையில் மோகன்ராஜ் (32), கொடுமுடியில் சின்னத்தம்பி (57), சென்னிமலையில் ரவி (36), சித்தோட்டில் தங்கவேல் என்ற நிசாந்த் (35), பர்கூரில் பெரியசாமி (33) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 58 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மது விற்ற பெண் உட்பட 10 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Exclusion Police ,Tasmac ,Dinakaran ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது