×

குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 384 மனுக்கள் மீது உடனே விசாரணை

 

புதுக்கோட்டை, பிப்.6: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது; பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 384 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மனவளர்ச்சி குன்றிய மற்றும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் 10 நபர்களுக்கு வங்கிக்கடன் மானியத்தொகை ரூ.70,000 மதிப்பிலான காசோலைகளையும் மற்றும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் 29 நபர்களுக்கு வங்கிக்கடன் மானியத்தொகை ரூ.8,30,000 மதிப்பிலான காசோலைகளையும் என மொத்தம் 39 நபர்களுக்கு வங்கிக்கடன் மானியத்தொகை ரூ.9,00,000 மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டது என தெரிவித்தார். இந்நிகழ்வுகளில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 384 மனுக்கள் மீது உடனே விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,People's Grievance Day ,Pudukottai District Collector ,Office ,District ,Collector ,Mercy Ramya ,District Collector ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...