×

தூத்துக்குடியில் இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி, பிப். 6: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்தும், வரும் 8ம் தேதி திருநெல்வேலி நேருஜி கலையரங்கத்தில் நடைபெறும் அதிமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாகவும் மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகர, பகுதி, பேரூராட்சி மற்றும் சார்பு அணி செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் தூத்துக்குடி பானு பிருந்தாவன் மினி ஹாலில் இன்று (6ம் தேதி) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post தூத்துக்குடியில் இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Thoothukudi ,South District ,S.P. Shanmuganathan ,Parliamentary General Election ,AIADMK Parliamentary Election ,Tirunelveli Nehruji Theater ,
× RELATED தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி...