×

டிரைவர் தர்ணா போராட்டம்

சேலம், பிப்.6: சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சேலம் அழகாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் யுவராஜ் (35) என்பவர், பதாகையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென கலெக்டர் கார் முன்பு அமர முயன்றார். இதைப்பார்த்த போலீசார் அவரை தடுத்து விசாரித்தனர். அப்போது, ‘‘நான் ஆட்டோ டிரைவர். எனக்கு உடல் நிலை பாதித்துள்ளது. சமீபத்தில் சிஎன்ஜி கேஸ் ஆட்டோ வாங்க பர்மிட் கேட்டு, சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் இதுவரைக்கும் அவர்கள் எனக்கு பர்மிட் வழங்கவில்லை. இதைவிட்டால் எனக்கு வேறு தொழில் இல்லை. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது ஆட்டோவுக்கு பர்மிட் வழங்க வேண்டும்,’’ என்றார். இதையடுத்து டவுன் போலீசார் அவரை அழைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

The post டிரைவர் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Driver dharna ,Salem ,Yuvraj ,Alaghapuram Kattur ,Dinakaran ,
× RELATED மோசடி செய்தவர் கைது