×

மீனாட்சிபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களின் திறமையால் வண்ணமயமான சுவர் ஓவியங்கள்

நாகர்கோவில், பிப்.6: நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களின் திறமையால் வண்ணமயமான சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் பள்ளியின் காம்பவுண்ட் உட்சுவரில் ஏற்கனவே தேசிய தலைவர்கள் மற்றும் இயற்கை காட்சிகள் ஆகியவற்றை பெயின்டால் வரைந்துள்ளனர். தற்போது புலி மற்றும் விளையாட்டு சார்ந்த காட்சிகளை வரைந்து அசத்தியுள்ளனர். இப்பள்ளியில் 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களான பிரேம்குமார், பாலசுப்பிரமணியன், சபரிநாதன், கண்ணன், சிரஞ்ஜிவ், ஹரிகிருஷ்ணா, மிதுண் சஞ்சய், கார்த்திக்குமார் ஆகியோர் புலி மற்றும் விளையாட்டு சார்ந்த காட்சிகளை சுமார் 400 சதுர அடியில் வரைந்துள்ளனர்.

பள்ளி தலைமை ஆசிரியை சுமதி தங்கம் வழிகாட்டுதலின்படி ஆசிரியர்கள் ரகுபதி, சிவசங்கர், கெபின்ஜோ மற்றும் சுரேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர். இது தொடர்பாக மாணவர்கள் கூறுகையில், ‘8ம் வகுப்பு முதல் ஓவிய ஆசிரியர்கள் எங்களுக்கு ஓவியம் வரைவதில் உள்ள நுட்பங்களை பயிற்சியின் மூலம் சொல்லி கொடுத்து வருகின்றனர். முதலில் புலி மற்றும் விளையாட்டு சார்ந்த ஓவியங்களை தாளில் வரைந்து பயிற்சி மேற்கொண்டு வந்தோம். பிறகு படங்களை பெயின்ட் மூலம் பள்ளி காம்பவுண்ட் சுவரின் உட்புறத்தில் வரைந்துள்ளோம்’ என்றனர். மேலும் இதர மாணவர்களும் தாங்களும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இது வளர்ப்பதாக அமைந்துள்ளது என்று தெரிவித்தனர். பள்ளிக்கு வருகை தரும் பெற்றோர்களும், பொதுமக்களும் மாணவர்களின் ஓவிய திறனை பாராட்டி வருகின்றனர்.

The post மீனாட்சிபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர்களின் திறமையால் வண்ணமயமான சுவர் ஓவியங்கள் appeared first on Dinakaran.

Tags : Meenakshipuram Government High School ,Nagercoil ,
× RELATED நாகர்கோவில் ஒழுகினசேரி, புத்தேரி...