×

தமிழக அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் 2 நாள் ஆலோசனை

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அனைத்து மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்கள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது மற்றும் இந்திய தேர்தல் ஆணையரின் முதன்மை செயலாளர் பலேய் மாலிக் ஆகியோர் சென்னைக்கு வருகை தருகின்றனர். அவர்கள் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள், தயார் நிலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர். அதன்படி இன்று தலைமை செயலகத்தில் மதியம் 12 மணியில் இருந்து பிற்பகல் 1.30 மணி வரை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் பிற அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர்.

அதன்பின்னர் பிற்பகல் 2.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை தலைமை செயலக பிரதான கட்டிடத்தின் 2-து தளத்தில் உள்ள கூட்டரங்கில் வருமான வரித்துறை உள்ளிட்ட அமலாக்க முகமை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து நாளை அதாவது 7ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின்னர் இரவு 9 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கின்றனர். இந்த அனைத்து கூட்டங்களுக்கும் இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பாது தலைமை தாங்குவார். எனவே இந்த கூட்டங்களில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழக அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் 2 நாள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Electoral Officer ,Satyapratha Sahu ,Deputy ,Commissioner ,India ,Ajay Badu ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...