×

தங்கம் விலை தொடர் சரிவு 2 நாளில் சவரன் ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 நாட்களில் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. இந்த நிலையில் கடந்த 2ம் தேதி ஒரு சவரன் ரூ.47,120க்கு விற்கப்பட்டது. 3ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,960க்கு விற்கப்பட்டது. 4ம் தேதி(நேற்று முன்தினம்) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,850க்கும், சவரனுக்கு160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,800க்கும் விற்பனையானது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

The post தங்கம் விலை தொடர் சரிவு 2 நாளில் சவரன் ரூ.320 குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Savaran ,CHENNAI ,Sawaran ,Dinakaran ,
× RELATED தங்கம் மீண்டும் ₹54 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் சவரன் ₹560 எகிறியது