×

க.பரமத்தி அருகே தீராத நோயால் விரக்தி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

 

க.பரமத்தி,பிப்.6: தீராத நோய் விரக்தியில் விஷம் சாப்பிட்ட தொழிலாளி பலனின்றி சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரம் அருகே வெங்கடாபுரத்தை சேர்ந்த மொட்டையப்பன் மகன் செல்வராஜ்(55). தொழிலாளி. இவர் கடந்த 6 மாதங்களாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக பல இடங்களில் சிகிச்சை மேற்கொண்டும் நோய் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இவர் கடந்த 25ம்தேதி விஷம் சாப்பிட்டு மயங்கியதாகவும் தகவலறிந்த உறவினர்கள் பாதிக்கப்பட்டவரை கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவரது உறவினர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post க.பரமத்தி அருகே தீராத நோயால் விரக்தி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Paramathi ,K. Paramathi ,Mottaiyappan ,Selvaraj ,Venkatapuram ,Chinnadharapuram ,
× RELATED க.பரமத்தி அருகே உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம்