×

மாற்று அரசியலை பாஜ முன்னெடுத்து வருகிறது: அண்ணாமலை பேட்டி

சென்னை: மாற்று அரசியலை பாஜ முன்னெடுத்து வருகிறது என, அண்ணாமலை கூறினார். சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜ தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: என் மண் என் மக்கள் நடைபயண நிறைவு விழா பல்லடத்தில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. 5 லட்சம் இருக்கைகள் போடப்பட உள்ளன. 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள். மிகப்பெரும் எழுச்சி மாநாடாக இது நடைபெறும். பிரதமர் தேர்தல் பிரசாரத்திற்கு தென் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. யார் வேட்பாளர் என்பதை நாடாளுமன்ற குழுவே அறிவிக்கும். பாஜவின் பலம் என்ன என்பது தெரியும். கூட்டணி பேச்சுவார்த்தை என்பது கடினமானது, பேச்சுவார்த்தைக்கு இன்னும் நேரம் உள்ளது.பிரதமர் மோடியை ஏற்கும் அனைவரும் பாஜவுடன் கூட்டணிக்கு வருவார்கள். இம்மாத இறுதிக்குள் கூட்டணி பற்றி தெரியவரும். மோடி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

இந்த தேர்தலில் பாஜ வாக்கு வங்கி எல்லோரும் திரும்பி பார்க்கும் வகையில் இருக்கும். மாற்று அரசியலை பாஜ முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ பல தொகுதியில் முதலிடத்தில் வரும். சில தொகுதிகளில் மட்டுமே நிற்கும் என்ற நிலை மாறிவிட்டது. தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். மாற்றுக் கட்சியினரும் மோடிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்ற கருத்தை இப்போதே கூற முடியாது. 39 தொகுதியிலும் ஏற்றத் தாழ்வு இன்றி பணிசெய்கிறோம். ஜி.கே.வாசன் என்னிடம் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் தொண்டர்கள் எங்கள் யாத்திரையிலும் பங்கேற்கிற்கார்கள்.
இன்னொரு கட்சியுடன் ஜி.கே.வாசன் பேசுவதை நாங்கள் தடுக்க முடியுமா? பரஸ்பரம் நட்பாக அவர்கள் பேசிக் கொள்வார்கள். நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி இன்னும் ஆரம்பிக்கவில்லை.
எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post மாற்று அரசியலை பாஜ முன்னெடுத்து வருகிறது: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Chennai ,Nadalkarai ,president ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...