×

நிதி குற்றங்கள் தொடர்பான வழக்கில் சாம்சங் நிறுவன தலைவர் விடுதலை

சியோல்: உலக புகழ்பெற்ற சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியின் தலைவர் லீ ஜே யோங்(56). 2015ம் ஆண்டு சாம்சங் சி அண்ட் டி நிறுவனம் செய்ல் என்ற நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. அவர் பங்கு விலைகளை அதிகரித்து காட்டியும், கணக்கு வழக்குகளில் மோசடியும் செய்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் லீ ஜே யோங்க்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரினர்.
ஆனால், நிறுவனங்கள் இணைப்பில் வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் என்று லீ ஜே கூறினார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து லீ ஜே யோங்கை நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. 2015ம் ஆண்டு நடந்த ஒப்பந்தம் தொடர்பாக அப்போதைய தென் கொரிய அதிபர் பார்க் க்யூன்-ஹியேவுக்கு ரூ.53.15 கோடி லஞ்சம் கொடுத்ததாக லீ ஜே யோங்குக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சில மாதங்கள் சிறையிலும் இருந்தார். அதன் பிறகு அதிபராக வந்த யூன் சுக் யோல், லீ ஜே யோங்குக்கு மன்னிப்பு வழங்கினார்.

 

The post நிதி குற்றங்கள் தொடர்பான வழக்கில் சாம்சங் நிறுவன தலைவர் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Samsung ,Seoul ,Lee Jae Yong ,Samsung Electronics Company ,Samsung C&T ,SAIL ,Dinakaran ,
× RELATED வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை