×

தோனியின் அவமதிப்பு வழக்கு மாஜி ஐபிஎஸ் அதிகாரியின் 15 நாள் சிறைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் கடந்த 2013ல் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றிலும் பேசியதைத் தொடர்ந்து, 2014ல் தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் சம்பத்குமார் தரப்பில் அளித்த பதில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டி தோனி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவமதிப்பு வழக்கில், சம்பத் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 15 நாள் சிறை தண்டனை விதித்தது.சம்பத்குமாரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.

 

The post தோனியின் அவமதிப்பு வழக்கு மாஜி ஐபிஎஸ் அதிகாரியின் 15 நாள் சிறைக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dhoni ,Supreme Court ,New Delhi ,IPS ,Sampath Kumar ,Mahendra Singh Dhoni ,IPL cricket ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு